இலங்கை திவால் நிலைக்கும் கீழே தள்ளப்பட்டுள்ளது - முக்கிய பிரபலம் வெளியிட்ட தகவல்
வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கீழ் குறைந்துள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரியின் அறிவிப்பின்படி இலங்கை திவால் நிலைக்கும் கீழே தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் கையிருப்பு மிகக் குறைந்த அளவிற்குக் குறையும் போது மேலும் வீழ்ச்சியடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா எமக்கு ஏற்கனவே 5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்கியுள்ளதாகவும், வெளிநாட்டு கையிருப்பை அதிகரிப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்கத் தவறினால் நாடு மேலும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
இலங்கையினால் பெறப்பட்ட கடன்களை மறுசீரமைக்க சீனா மறுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கோரி ஜப்பானிய பிரதமருக்கு ஜனாதிபதி கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் சாதகமான பதிலைக் காட்டியுள்ளதாக அறிந்தோம். அதுதான் தற்போது எமக்கு உள்ள ஒரே நம்பிக்கை. அந்தக் கடனைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், நாங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) விகிதாச்சாரத்தில் வரி விகிதம் 7.5% ஆக உள்ளது, "ஒரு நாடு எப்படி இவ்வளவு குறைந்த வரி விகிதத்தில் இயங்க முடியும்?" என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 7 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
