நாட்டின் முன்னணி நிறுவனங்கள் அரசாங்கத்திடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
நாட்டிலுள்ள பல முன்னணி வர்த்தக நாமங்களை கொண்டுள்ள நிறுவனங்கள் அரசாங்கத்திடம் இன்று முக்கிய கோரிக்கை விடுத்துள்ளன. அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையினை விடுத்துள்ளன.
இதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கு தேவையான ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து தேவையான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான தருணத்தில் பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்துவதற்கு தேவையான ஸ்திரத்தன்மை தேவை என குறித்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மாற்றம் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் உரிமைகளுக்காக எழுந்து நிற்போம் என்றும் அந்த நிறுவங்கள் அறிவித்துள்ளன.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியுடனான 400 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்ற வசதியை நிறைவு செய்வதை ஒத்திவைக்க இந்திய ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது.
நெருக்கடியான காலங்களில் இலங்கைக்கு மற்றுமொரு உதவியாக இந்த வருடம் ஜனவரியில் முடிவடையவிருந்த பணப்பரிமாற்ற வசதியை நிறைவு செய்வதை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.