மகிந்தவின் உருவத்துடன் சடலமாக காட்சியளித்த நபர்! (Photo)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பான ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை போன்று உடையணிந்து, சிவப்பு நிற சால்வையுடன் சடலமாக காட்சியளித்துள்ளனர்.
இதன்போது மலர்வளையம் வைத்து அந்த நபருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய போராட்டத்திற்காக அலரி மாளிகைக்கு முன்பாக கட்டப்பட்டிருந்த தற்காலிக கூடாரங்களை அகற்றுவதற்கு பொலிஸார் இன்று நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புகழ் விசாலாட்சியா இது?... Frock போட்டு அவர் வெளியிட்ட போட்டோ Cineulagam
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam