பிரதமருக்கு இந்த நிலையேற்பட அவரை சுற்றியுள்ளவர்களே காரணம் - விமல் வீரவன்ச
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள சுயாதீன குழுக்கள் தீர்மானித்துள்ளன.
கொழும்பில் இன்று (26) பிற்பகல் அந்தக் குழுக்கள் நடத்திய கலந்துரையாடலின் போது இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்படி நாளை முதல் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க குழுக்கள் தீர்மானித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
"இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அனைத்து தரப்பினருடனும் கலந்து பேசி முடிவெடுப்போம். தற்போது யாரோ ஒருவர் செய்வது நாட்டை சீர்குலைக்க உதவுவதாகும். இந்த நேரத்தில் ஆபத்துகள் இருந்தாலும் பொறுப்பேற்று நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும்."
"பிரதமர் இந்த நிலைக்குத் தள்ளப்பட வேண்டியவர் அல்ல, அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரை அந்த நிலைக்குத் தள்ளியுள்ளனர். அரசியலமைப்பின்படி ஜனாதிபதி இல்லாமல் நாட்டை நடத்த முடியாது. ஆனால் இடைக்கால நிர்வாகத்தின் கீழ், ஜனாதிபதி அவர் நினைப்பதைச் செய்ய முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
