குறைந்த வருமானம் பெறுவோருக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
குறைந்த வருமானம் பெறும் மக்களை முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய கொள்கை நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த கொள்கைத் தீர்மானங்கள் முறையாக எடுக்கப்படாமையால், கடந்த காலங்களில் பொருளாதார சிக்கல்கள் பலவற்றை சந்திக்க வேண்டியிருந்தது.
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் தீவிர பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நலன்புரித் திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது. சிறுநீரக நோயாளர்கள், முதியோர் கொடுப்பனவிற்கான பதியப்பட்ட அனைவருக்கும் அந்த நன்மைகளை வழங்குமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாட்டில் உள்ள அரச அதிகாரிகளின் தீவிர பங்களிப்பு அவசியமாகும். அதன்போது நன்மைகளை அடையாளம் காண்பது முறையாக இடம்பெறும்.
அஸ்வெசும நலத்திட்டத்தை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும்ரூபவ் ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்.
you my like this video