எதிர்வரும் காலாண்டில் நாட்டில் நெருக்கடி நிலைமை! சபையில் வெளிப்படுத்தப்பட்ட உண்மை நிலவரம்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் போன்று அரசாங்கம் காட்டுவது வெறும் மாயையே என்றும், உண்மையில் தற்போதைய பொருளாதார நிலைமை அடுத்து வரும் காலாண்டில் நாட்டை பெரும் நெருக்கடிக்குள் தள்ளும் என்றும் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (18.07.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் ஏற்றுமதி வருமானத்தின் ஊடாகவே பொருளாதார முன்னேற்றத்தை பார்க்கலாம். எரிபொருள், எரிவாயு, வரிசை இல்லை என்று அரசாங்கம் காட்டினாலும் உண்மையில் வீழ்ச்சியே உள்ளது.
தேசிய உற்பத்தி ஏற்றுமதி வருமானம், இறக்குமதி வருமானம் என்பன குறைவடைந்துள்ளன. இந்த பயணத்தில் மிகவும் நெருக்கடியான நிலைமையை எதிர்வரும் காலாண்டில் முகம் கொடுக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |