வெடித்தது மக்கள் புரட்சி - மகிந்தவின் சகாக்களின் வீடுகள் தீக்கிரை (Photo)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக கொழும்பில் மிகவும் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அரச ஆதரவாளர்கள் தாக்கியதை தொடர்ந்து அமைதியாக இடம்பெற்ற போராட்ட களம் வன்முறை களமாக மாறியது.
இதன் விளைவான அரச ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அவர்களை அழைத்து வந்த வாகனங்கள் எரிக்கப்பட்டன. அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், இந்த வன்முறை தீவிரமடைந்ததை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வீடு தீவைக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களின் வீடுகளும் தீவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தீவைக்கப்பட்ட வீடுகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
- சனத் நிஷாந்தவின் வீடுகள்
- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
- குருணாகல் மேயர் இல்லம்
- ஜோன்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்
- மொரட்டுவவின் மேயர் இல்லம்
- கால்கள். என் அனுஷா பாஸ்குவல் வீடு
- பிரசன்ன ரணதுங்காவின் வீடு
- ரமேஷ் பதிரன வீடு
- பண்டாரவின் வீடு
- ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறை
- நீர்கொழும்பில் அவென்ரா கார்டன் ஹோட்டல்
- அருந்திகவின் வீடு
- கனக ஹேரத்தின் வீடு
- காமினி லொகுகேவின் வீடு
- நிமல் லன்சாவின் (2 வீடுகள்)
- பந்துல குணவர்த்தனவின் வீடு
- அலி சப்ரி ரஹீமின் வீடு
- ரோகித அபேகுணவர்தனவின் வீடு
- கெஹலிய ரம்புக்வெலவின் வீடு