துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பொலிஸார் போட்டுள்ள திட்டம் - துமிந்த நாகமுவ வெளியிட்ட தகவல்
பொலிஸார் மீது போலித் தாக்குதல் மேற்கொண்டு, அதன் பழியை தமது கட்சி மீது சுமத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவருவதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எமக்கு நம்பமான அறிக்கைகள் கிடைத்துள்ளன. இன்று இரவு இதுவரை நடைபெற்ற சம்பவங்களை பயன்படுத்தி, பொலிஸார் மீது தாக்குதல் நடத்துவதற்கு அவர்களே திட்டமிட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர் மூலம் பொலிஸார் மீதே தாக்குதல் மேற்கொண்டு, அந்த தாக்குதல் நடத்திய குற்றத்தை தம்மீது சுமத்துவதற்கு தயாராகியுள்ளனர் என்ற நம்பகமான செய்தி எமக்கு கிடைத்துள்ளது.
இவ்வாறான சதி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். கோட்டாபய ராஜபக்ச வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றே மக்கள் கோருகின்றனர். அந்த கோஷமே நாடாவிய ரீதியில் தற்போது வலுபெற்றுள்ளது.
அந்த மக்களின் கோஷத்திற்கு செவிசாய்ப்பதை விடுத்து, இவ்வாறான சதி நடவடிக்கையை மேற்கொண்டு தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு முயற்சித்தால் நிலைமைகள் மேலும் மோசமடையும். இந்த சதி நடவடிக்கையை முறியடிப்பதற்கு மக்கள் முன்வர வேண்டும்.
ஆகவே இவ்வாறான சதி நடவடிக்கையுடன் இணைந்து கெள்ள வேண்டாம் என கீழ் மட்டத்தில் உள்ள பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் நாம் கோரிக்கை விடுகின்றோம்.
அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் எனவும் கோருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
