காலம் வந்ததும் கோட்டாபய பதவி விலகுவார் - இராஜாங்க அமைச்சர் தகவல்
ஜனாதிபதி பதவி விலகுவதற்கான காலம் வந்ததும் அவர் அப்பதவியிலிருந்து விலகிவிடுவார் என கலாசாரம் மற்றும் கலை நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “கோட்டா கோ ஹோம்” என்று கூறுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“வாக்குகளால் வெற்றிப் பெற்ற வந்த பின்னர் ஏன் கோ ஹோம் சொல்ல வேண்டும் .சிறிமாவோ பண்டாரநாயக்க, பிரேமதாச, ஜே.ஆர். ஜயவர்தன ஆகியோர் வீட்டுக்கு செல்லுமாறு கூறியபோது சென்றார்களா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, இளைஞர், யுவதிகள் தமது மன இறுக்கங்களிலிருந்து விடுபட காலி முகத்திடலுக்கு வருகைத் தருகின்றமை வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.
இதன் பின்னணியில் நடக்கும் சில விடயங்கைளைப் பார்த்தால் குழந்தைகளை விற்று உண்ணும் வகையிலான குழு ஒன்று இருப்பதாகவே தெரிகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
