விவாதத்திற்கு வருகின்றது ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை (NCM) எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (12) பிற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியினர் முன்வைத்துள்ளனர்.

பத்தரமுல்லை, தியத்த உயனவில் இடம்பெற்ற ‘ஹொரு கோ கம’ போராட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டர். குறித்து காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, மே 6ம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை, திட்டமிட்டபடி மே 17ம் திகதி நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (11) நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டம் முடிவில்லாமல் நிறைவடைந்த நிலையில் தற்போதைய நெருக்கடிகளுக்கு சாத்தியமான தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக கட்சித் தலைவர்கள் இரண்டாவது நாளாக நேற்று கலந்துரையாடினர்.

உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
இந்த புகைப்படத்தில் எம்.ஜி.ஆர் தூக்கி வைத்திருக்கும் சிறுவன் யார் தெரியுமா? தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ Cineulagam