ஒமிக்ரோன் காரணமாக தமது திருமண நிகழ்வை ஒத்திவைத்த பெண் பிரதமர்!
நியூசிலாந்து பிரதமர் தனது திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.
ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், அவர் தமது திருமண நிகழ்வை ரத்துச்செய்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமரான 40 வயதான ஜெசிந்தா ஆர்டெனுக்கும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவரான 44வயதான கிளார்க் கைபோர்ட்டுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
நியூசிலாந்து நாட்டின் மிக இளம்வயது பிரதமரான ஆர்டென் கடந்த 2017ம் ஆண்டு கர்ப்பிணியாக இருந்தபொழுது பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் மகள் ஒருவரும் இருக்கிறார்.
இந்தநிலையில், கொரோனாவின் புதிய வகையான ஒமிக்ரோன் பாதிப்புகள் நியூசிலாந்திலும் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்தே, நியூசிலாந்து பிரதமர் தனது திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.









பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
