லொஹான் ரத்வத்தே விவகாரம்! - தேர்தல்கள் ஆணைக்கு விடுத்துள்ள கோரிக்கை
பொது பிரதிநிதிகள், சிறைச்சாலைகளுக்குள் நுழைந்து கைதிகளை மிரட்டும்போது நாட்டின் தேர்தல் அமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்து விடுவார்கள்.
எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சபாநாயகரிடம், தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
இன்று கூடிய தேர்தல் ஆணைக்குழு, சிறை சீர்திருத்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சம்பந்தப்பட்ட வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலையில் அண்மைய சம்பவங்கள் குறித்து விவாதித்தது.
இந்த விடயத்தில், கைதிகளின் மனித உரிமைகள் மீறப்பட்டமை மட்டுமல்ல, பொதுமக்களும் தேர்தல் அமைப்புகள், ஜனநாயகம் போன்ற விடயங்களில் நம்பிக்கைகளை இழக்க நேரிடும்.
அத்துடன் பொது பிரதிநிதிகளின் இத்தகைய செயல்கள், நாட்டின் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் செயல்முறையின் விளைவு குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்படும்.
எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நாடாளுமன்றத்தில் சபாநாயகரிடம் கோர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam