எபோலா தொற்றின் தாக்கம் தீவிரம் - உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு..!
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,011 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை ஐந்து மாகாணங்களில் 4,381 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வரலாற்றில் மிக வேகமாகவும் தீவிரமாகவும் பரவி வரும் எபோலா தொற்றாக இது பதிவாகியுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நோய் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு
தற்போது பரவி வரும் 17 ஆவது எபோலா அலையானது “புண்டிக்புகியோ” வகையைச் சேர்ந்தது என்றும், இதற்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம், நாட்டின் உட்கட்டமைப்பு பலவீனம் மற்றும் பாதுகாப்பு அற்ற சூழல் என்பன இந்த வைரஸ் விரைவாகப் பரவுவதற்குக் காரணங்களாக அமைந்துள்ளன.
அண்டை நாடான உகாண்டாவிற்கும் இந்தத் தொற்று பரவியுள்ளதைத் தொடர்ந்து, உலக சுகாதார நிறுவனம் இதனை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட எபோலா பரவல்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்படைந்துள்ளமை மருத்துவ உலகிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உதவிகளை விரைவுபடுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
பிரித்தானியாவை வாட்டும் வெப்பம்: 11 பகுதிகளில் வறட்சி அறிவிப்பு: 45 மில்லியன் மக்கள் பாதிப்பு News Lankasri