ஆளுநர் வழங்கிய உத்தரவாதம்! கைவிடபட்டது சேவை முடக்கல் போராட்டம்

Sri Lanka Sri Lankan Peoples SL Protest Northern Province of Sri Lanka
By Theepan Jun 30, 2025 10:04 AM GMT
Report

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதிவழங்கியதன் அடிப்படையில் நாளை(1) முன்னெடுக்கவிருந்த சேவை முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இதனை  வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

வவுனியாவில் பெட்ரோலை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு நேர்ந்த கதி

அத்துமீறிய செயற்பாடு

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளுநர் வழங்கிய உத்தரவாதம்! கைவிடபட்டது சேவை முடக்கல் போராட்டம் | Eb Union Protest After Promise Fail

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் நாளையதினம் செவ்வாய்க்கிழமை வடக்கில் சேவை முடக்கல் போராட்டம் இடம்பெறும் என கடந்தவாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இ.போ.சபை, வடக்கின் ஆளுநர் மற்றும் துறைசார் தரப்பினர் இனி வருங்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்று வழங்கிய உத்தரவாதத்துக்கு அவை குறித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற கால அட்டவணைக்கு முரணான சேவை ஒன்றால் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனியார் மற்றும் இ.போ.ச தரப்பினரிடையே குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டிருந்தது.

உலகின் மிகவும் வறண்ட பாலைவனத்தில் நடந்த நம்பமுடியாத நிகழ்வு

உலகின் மிகவும் வறண்ட பாலைவனத்தில் நடந்த நம்பமுடியாத நிகழ்வு

சேவை முடக்கல் போராட்டம்

இதையடுத்து பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமை சுமுகமாக்கப்பட்டது. ஆனாலும் இந்த சட்டவிரோதம் குறித்து துறைசார் தரப்பினருக்கும் போக்குவரத்து அதிகார சபை, துறைசார் அமைச்சு, வடக்கின் ஆளுநர் ஆகியோரிடம் முறையிட்டிருந்ததுடன், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

ஆளுநர் வழங்கிய உத்தரவாதம்! கைவிடபட்டது சேவை முடக்கல் போராட்டம் | Eb Union Protest After Promise Fail

ஆனாலும் எந்தவொரு தீர்வுக் கிடைக்காத நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் ஆளுநர், இ.போ.சபை, பொலிசார் இந்த விடயம் தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக இ.போ.ச சட்ட விரோத சேவையை இடை நிறுத்தியுள்ளது.

அத்துடன் இணைந்த சேவை தொடர்பிலும் வரவுள்ள நாள்களில் இரு தரப்பினருடனும் கலந்து பேசி தீர்வை காண முயற்சிப்பதாகவும் எமக்கு உறுதி தந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் மக்களின் இயல்பு நிலையை சீர் குலைவதை தவிர்க்கும் வகையில் சேவை முடக்கல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

தாயை சீரழித்து பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்! சபையில் உணர்ச்சிவசப்பட்ட அர்ச்சுனா

தாயை சீரழித்து பச்சிளம் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூரம்! சபையில் உணர்ச்சிவசப்பட்ட அர்ச்சுனா

மேலதிக தகவல்- யது பாஸ்கரன்


மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US