பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்த ஹஸன் ஸலாமா
திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.
குறித்த சாதனையை நேற்று அதிகாலை 02.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 11.00 மணியளவில் முடித்துள்ளார்.
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் எட்டாவது நபராகவும், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த உலகின் முதலாவது முஸ்லிம் நபராகவும் ஹஷன் ஸலாமா நிறைவு செய்துள்ளார்.
இலங்கை கடல் எல்லை
தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களாக இச்சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரையான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்திக் கடந்துள்ளார்.
மேலும் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்டியில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |