பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கறுப்புக்கொடிகளை ஏந்தியவாறு தமது கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வரிவிதிப்பினை நீக்கவும் பொருட்களின் விலையேற்றம் மற்றும் மின்சார கட்டணம் அகரிப்பு ஆகியவற்றிற்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம்,கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி
நடைபெறவுள்ள நாடளாவிய ரீதியான வேலை நிறுத்த போராட்டத்திற்கும் முழுமையான
ஆதரவினை வழங்குவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.




புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam