பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிழக்குப் பல்கலைக்கழகம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீட தொழிற்சங்கத்தினர் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தின் தலைவர் ஏகாம்பரம் ஜெகராஜ் தலைமையில் புதிய கல்முனை வீதியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்திற்கு முன்னால் இன்று(28.02.2024) இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியத் திட்டம்
இல்லாமல் செய்த சம்பள அதிகரிப்பை அதிகரி, எம்.சி.ஏ கொடுப்பனவை அதிகரி, இலவசக் கல்வியையும் குழிதோண்டிப் புதைக்காத்தே, பயனுள்ள ஓய்வூதியத் திட்டத்தை நடைமறைப்படுத்து, பல்கலைக்கழக சமூகத்திற்கு பொதுக் காப்புறுதி முறைமையை உருவாக்கு, நிறுத்தி வைக்கப்பட்ட மொழித்தேர்ச்சிக் கொடுப்பனைவை உடன் வழங்கு, பதவி வெற்றிடங்களை உடன் நிறுத்து போன்ற வாசகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏந்தியவாறு கோசங்களை ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று (28.02.2024) மற்றும் நாளை (29.02.2024) ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இடம்பெற்றுவருகின்ற நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 20.02.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இரு தினங்களும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாராப் பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது
மேலும், நாளைபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஒன்றினையும் முன்னெடுப்பது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி - தீபன்
தென் கிழக்குப் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு இணங்க, நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இருநாள் (28,29) தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செய்தி - பாருக் சிகான்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



