கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைய முயற்சி : அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை
தமிழர்களின் கலை மற்றும் கலாசாரம் தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் தமிழ் நாட்டின் அண்ணா பல்கலைக்கழகம் இணையவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழ் வளர்ச்சிக்கான மையத்தினால் இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கலை மற்றும் சிற்பம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் ஜூன் 13 முதல் நடைபெறவுள்ளது.
கருப்பொருட்கள்
இந்த மூன்று நாள் மாநாடானது, செங்கலடி - வந்தாறுமூலையில் ஆசியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளது.
இதன்போது, மாநாட்டின் கருப்பொருட்களில், வரலாற்று பாரம்பரியம், மொழி, இலக்கியம், பாரம்பரிய தகவல் தொடர்பு அமைப்பு, பரிய வேலைவாய்ப்பு அமைப்பு, சமூகம், கலை, கைவினைப்பொருட்கள், கட்டிடக்கலை, பாரம்பரிய உடைகள், விளையாட்டுகள், உணவு மற்றும் சமையல் மரபுகள் ஆகியவை அடங்கும்.
மேலும், திருவிழாக்கள் மற்றும் சடங்குகள், தமிழ் கலை மற்றும் கலாசாரத்தில் உலகமயமாக்கலின் தாக்கங்கள் போன்ற பிற கருப்பொருள்களும் சேர்க்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |