கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை மேம்பாடு: ஜப்பான் வழங்கியுள்ள உறுதிமொழி
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதுடன் ஜப்பானில் இலங்கையர்களுக்கு அதிகளவான தொழில்வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது தூதுவர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சுற்றுலாத் தலமாக திகழும் ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்டதுடன், மட்டக்களப்பின் சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தூதுவர் உள்ளிட்ட குழு
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமது விஜயம் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தூதுவர் உள்ளிட்ட குழுவினர் கிழக்கின் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
