நிலம் பகிர்வில் ஏற்பட்ட மோதல்: 200 பேர் பலி
சூடான் நாட்டில் சில குழுக்களுக்கு இடையே நிலம் பகிர்வில் ஏற்பட்ட மோதல் காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளது.
நிலம் பகிர்வில் வாக்குவாதம்
சூடான் நாட்டின் தெற்கே பழங்குடியின மக்கள் பல பிரிவுகளாக வசித்து வருகின்றனர். இதில், ஹவுசா பிரிவு மக்களுக்கும் வேறு சில குழுக்களுக்கும் இடையே நிலம் பகிர்வில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஹவுசா பிரிவு மக்கள் புளூ நைல் பகுதியில் கடைசியாக வந்து குடியேறிய குழுவாக இருப்பதால், நாட்டின் பழங்குடியினர் சட்டம் அவர்கள் சொந்தமாக நிலம் வைத்திருப்பதை தடை செய்கிறது.
அவசரகால நிலை
இதனையடுத்து,சட்டத்தால் தமக்கு பாகுபாடு காட்டப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து
ஹவுசா பிரிவு மக்கள் குழு சூடான் முழுவதும் அணிதிரண்டுள்ளது.
இதன்போது தலைநகர் கார்ட்டூம் நகரில் இருந்து தெற்கே 500 கி.மீ. தொலைவில் உள்ள ரோசிரெஸ் பகுதியில் வத் அல்-மஹி என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில், நேற்றும் இன்றும் என இரண்டு நாட்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளது. பலர் வன்முறையில் காயமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, மாகாணத்தின் ஆளுநர், புளூ நைல் மாகாணம் முழுவதும் 30 நாட்களுக்கு அவசரகால நிலையை பிறப்பித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
