மூதூர் கல்வி வலயத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டுகொள்ளாத கிழக்கு மாகாண கல்வி அமைச்சு
திருகோணமலை மாவட்டம் மூதூர் கல்வி வலயத்தில் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கு அதிகமான பற்றாக்குறை இருப்பதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கல்வி வலயத்தில் சில தமிழ் பாடசாலைகளில் நீண்ட காலமாக விஞ்ஞான பாடத்திற்கு ஆசிரியர்கள் இல்லாமை தொடர்பாக வலயக்கல்விப் பணிப்பாளரிடம் சங்கத்தின் பொதுச்செயலாளர் வினவியபோது,
ஒட்டுமொத்த வலயத்திலும் விஞ்ஞான பாட ஆசிரியர்கள் போதாமல் இருப்பதாகவும், புதிய நியமனங்களில் கூட விஞ்ஞான பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் பதிலளித்துள்ளார்.
இந்த விடயமானது வசதியுள்ள மாணவர்களை நகர்ப்பகுதிக்கு அனுப்புவதற்கும், வசதி குறைந்த மாணவர்களை விஞ்ஞானத்துறையில் இருந்து அப்புறப்படுத்தும் கைங்கரியத்தைக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செய்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.