கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை நீடிக்குமாறு மதத்தலைவர்கள் கோரிக்கை (Video)
கிழக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் அனுராதா யாஹம்பத்தின் குறித்த பதவியில் நீடிக்குமாறு கோரி மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை-உப்புவெளி பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இன்று (08.05.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சர்வ மத தலைவர்கள் தெரிவித்ததாவது,
அனுராதாத யகம்பத்
கடந்த மூன்று வருட காலமாக கிழக்கு மாகாணத்தினுடைய ஆளுநராக செயல்பட்டு வருகின்ற அனுராதாத யகம்பத் இன மத குல பேதம் இன்றி மாகாணத்தினுடைய அபிவிருத்தி கருதி செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகளை சிரமமான முறையிலே முன்னெடுத்து வந்த சந்தர்ப்பத்தில் இவரை இடமாற்றுவதன் மூலம் அந்த வேலைகள் இடை நடுவே நிறுத்தப்படும் என்றும் மாகாணத்தினுடைய அபிவிருத்திக்கு அது தடையாக அமையப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாண ஆளுநராக இருக்கக்கூடியவரை ஒன்றரை வருடங்களுக்காவது சேவையாற்ற அனுமதித்து மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தினுடைய கல்வி விவசாயம் மற்றும் மத நல்லிணக்கத்தை எழுப்பியவர்
எனவும் கடந்த காலங்களில் சேவையாற்றிய ஆளுநர்களை விட தற்போது ஆளுநர் சிறப்பான
முறையில் சேவையாற்றி வருகின்றார் எனவும் இவரை தொடர்ச்சியாக கிழக்கு மாகாண
ஆளுநராக கடமையாற்றுவதற்கு ஜனாதிபதி நியமனம் வழங்க வேண்டும் எனவும் சர்வ மத
தலைவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
