கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற ஆய்வு மகாநாடு நிகழ்வு
மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம் மற்றும் தமிழ் சங்கம் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் இணைந்து நடாத்திய தமிழர் பண்பாடும் செல் நெறிகளும் பன்னாட்டு ஆய்வு மகாநாடு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்று (17.05.2024) மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பாரம்பரிய தமிழர் கலாச்சார முறைப்படி நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் வா.கனகசிங்கம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜேஜே முரளிதரன் கலந்து கொண்டுள்ளனர்.
சர்வதேச விருதுகள்
ஆய்வு மகாநாட்டில் கலை கலாச்சார நிகழ்வுகளும் தமிழர் பண்பாடும் செல் நெறிகளும் என்னும் தலைப்பில் பன்னாட்டு ஆய்வும் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து செம்புலன் ஆய்வு நூல் முதல் பிரதியை மாவட்ட அரசாங்க அதிபர் பெற்றுக் கொண்டதுடன். தமிழின் மேம்பாட்டுக்கு துணை நின்ற தமிழ்நாடு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஆய்வாளர்கள், கலைஞர்கள் இங்கு அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 21 பேருக்கு சர்வதேச விருதுகள் பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டு நூல் ஆசிரியர்களால் வெளியிடப்பட்ட சில நூல்களும் இங்கு விருந்தினர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.







ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
