தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை சந்தித்த கிழக்கு ஆளுநர்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இந்த சந்திப்பு நேற்றைய தினம் (10.09.2023) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கிழக்கு மாகாண மக்கள் சமகாலத்தில் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடியிருந்தோம்.
அவற்றில் சிலவற்றுக்கு அவ்விடத்திலேயே செயலாளர்கள் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் பணித்திருந்தார்.
காணி விடுவிப்பு
பல்லின சமூக நல்லிணக்க விடயங்களில் ஆளுநர் மிக அக்கறை மிக்கவராக அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.
மேற்படி சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்புக்கள் செய்வது, மயிலத்தானமடு மாதவனை பிரதேசத்தில் தொடர்ந்தும் அத்துமீறி அபகரிக்கப்பட்டுவரும் மேய்ச்சல் தரை காணிகள் தொடர்பாகவும், கிழக்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைகள், சட்ட விரோதமான மண் அகழ்வு, காணி அபகரிப்புகள், காட்டு யானைகளின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக மட்டக்களப்பு புதுநகரில் விமானப் படையினரால் வசப்படுத்தப்பட்டுள்ள வலையிறவு பிரதான வீதியினை மீளவும் பொதுமக்களின் பாவனைக்கு விட வேண்டும்.
தாண்டியடி பிரதேசத்தில் பொலிஸாரினால் அபகரிக்கப்பட்டுள்ள மயான காணியினை விடுவிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள்
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் வலயங்களுக்கு மாத்திரம் பாரபட்சமான முறையில் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை தொடர்பிலும் அதனால் கிழக்கில் உள்ள தமிழ்க் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் அதிருப்தியடைந்துள்ளமை பற்றியும் எம்மால் ஆளுநருக்கு எடுதுரைக்கப்பட்டது.
மேலும், அந்த விடயம் தொடர்பில் பாரபட்சமின்றி உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு ஆளுநர் அவ்விடத்திலேயே அறிவித்தல்களை வழங்கி இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ. யோகேஸ்வரன், க.கோடீஸ்வரன், ஞா. கிருஷ்னபிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)
புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு News Lankasri
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)
நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க Cineulagam
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)