கிழக்கு ஆளுநர்- கொரிய தூதுவர் இடையே சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான கொரிய தூதர் மியோன் லீ ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (18) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதன் போது மாகாணத்தில் மற்றும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
கலந்துரையாடல்
மாகாணத்தில் சுற்றுலா, இறால்வளர்ப்பு, விவசாய அபிவிருத்தி, உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற துறைகளில் முதலீடுகளுக்கான ஏற்ற சூழல் காணப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார்.
மேலும், மாகாணத்தில் காணப்படும் போதைப்பொருள் பிரச்சினை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிலை ஆகியவற்றை பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கொரிய தூதுவர் “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தைப் பாராட்டி, அதன் சுற்றுச்சூழல் மற்றும் சமூக முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












அட நடிகர் சந்தானம் மகனா இது, சூர்யாவுடன் அவர் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ... நல்லா வளர்ந்துட்டாரே... Cineulagam

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
