இந்திய உயர்ஸ்தானிகராலய முக்கியஸ்தரை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்
கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விக்கான முதன்மைச் செயலாளர் சந்தீப் சௌத்ரிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று(26) திருகோணமலையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பூரண ஒத்துழைப்பு
இந்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட 2371 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் ஆளுநர் கலந்துரையாடியதுடன், அதற்கு உரிய உதவியையும் வழங்குவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு இந்திய அரசாங்கம் ஏற்கனவே வழங்கி வரும் உயர்கல்வி புலமைப்பரிசில்கள் குறித்து இங்கு தெரிவித்த இந்திய செயலாளர், எதிர்காலத்தில் இலங்கையின் மற்றும் கிழக்கு மாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளின் மேம்பாட்டிற்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri