அரசாங்க மருத்துவ அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகரவுக்கும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் (GMOA) இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலானது, (05) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
உரிய நடவடிக்கைகள்
இதன்போது, மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் தெரிவிக்கப்பட்டதுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.
குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. ஏ. சி. என். தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க, மாகாண சுகாதார சேேவைகள் பணிப்பாளர் டாக்டர் டி.ஜி.எம். கொஸ்தாா மற்றும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





