முன்னாள் சட்டமா அதிபர் டப்புல டி லிவேராவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முயலும் கத்தோலிக்க திருச்சபை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக கூறிய முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது குறித்து ஆராயப்படுவதாக இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
வணக்கத்துக்குரிய அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இந்த தகவலை ஊடகம் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார்.
இதன்மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சதித்திட்டத்தை பகிரங்கப்படுத்தமுடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுடன் தொடர்புடைய சதிக்காரர்கள் கைது செய்யப்படாமை, இலங்கையின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான விடயமாகும் என்றும் அருட் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வெற்றியின் ஒரு கட்டமாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இருந்திருக்குமானால், தேர்தல் ஒன்றுக்காக உயிர் பலியாக்கப்பட்ட முதல் தேர்தலாக அது அமைந்திருக்கும் என்று அருட் தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
