வரவிருக்கும் விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு! வத்திக்கானுடன் இணைந்து முக்கிய நகர்வு! பகிரங்க எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை இலங்கை கத்தோலிக்க திருச்சபை மற்றும் வத்திக்கானுடன் இணைந்து மறைமுக செயற்பாடுகளை மேற்கொண்டு செய்து வருவதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இலங்கை கத்தோலிக்க திருச்சபை வத்திக்கானுடன் இணைந்து ஒரு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
எனினும் அது பற்றி நாங்கள் இப்போது எதையும் வெளியிடப்போவதில்லை என்று கர்தினால் ரஞ்சித் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.
இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு, திருச்சபை சர்வதேச உதவியை நாடினால், இலங்கை எதிர்நோக்கும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கடந்த திங்களன்று குடியியல் சமூக ஆர்வலர் ஷெஹான் மாலக கைது செய்யப்பட்டதை பற்றி குறிப்பிட்ட கர்தினால், அது ஒரு கடத்தல் என்று குறிப்பிட்டார்.
“ஷெஹான் சாலையில் நடந்து செல்லும் போது ஒரு வெள்ளை வானில் அழைத்துச் செல்லப்பட்டார். பொதுமக்களைக் கைது செய்வதற்கு நாகரீகமான வழிகள் இருக்கின்றன.
எனவே அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதை கடமையாக கொள்ளவேண்டாம் என்று சட்டமா அதிபர் மற்றும் காவல்துறை அதிபருக்கு நினைவுபடுத்த விரும்புவதாக கர்தினால் தெரிவித்தார்.



