உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்! குகதாசன் எம்.பி வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (14.6.2026) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயல் மனிதாபிமானமற்ற செயல். அப்பாவி மக்கள் தேவாலயங்களில் சென்றவர்களை அநியாயமாக கொல்லப்பட்டார்கள்.இதை செய்த சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரனும் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

எது எவ்வாறாயினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.