இலங்கையில் நடமாடும் சஹ்ரானின் 300 சகாக்கள்! கம்மன்பில வெளிப்படுத்திய இரகசியம்!
'ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற 300 பேர் இலங்கையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு,300 பேர் வெடிகுண்டுகளுடன் சுற்றித் திரிவதாக உதயகம்மன்பில நேற்றையதினம்(31.3.2026) தெரிவித்து இருந்ததுடன் அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் எனவும் அவர் கூறியிருந்தார்.
மேலும், இதனைத் தடுப்பதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த அரசாங்கத்திற்கு தேசிய பாதுகாப்பின் கீழ் அச்சுறுத்தல் இருக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
ஆகவே, இந்த விடயம் தொடர்பில் ஒரே இனமாக சேர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி,