7 ஆண்டுகளாக நீதி கோரி காத்திருக்கும் கண்ணீர் - நீதிக்கான மக்களின் முடிவில்லா போராட்டம்!
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர், உயிர்த்த ஞாயிறு தினத்தை கொண்டாட சந்தோஷமாக ஆலயத்திற்குச் சென்ற மக்கள் பெருந்துயரை சந்தித்தனர்.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய ஆலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உள்ளிட்ட ஆலயங்களையும் நட்சத்திர விடுதிகளையும் குறிவைத்து பாரிய குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
இதில், 260இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொள்ளப்பட்டதோடு, 500இற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர்.
இவர்களுள் பல வெளிநாட்டவர்களும் உள்ளடங்குவர்.
இந்தநிலையில், இன்றையதினம் காலை கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, அங்கு வந்திருந்த மக்கள் கண்ணீர் மல்க 7 ஆண்டுகளின் நிறைவை அனுஸ்டித்ததுடன் நீதி கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பூசத்தில் குரு பெயர்ச்சி ... அடுத்த 6 மாதங்கள் இந்த ராசியினரின் நிதி நிலையில் அசுர வளர்ச்சி உறுதி! Manithan
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri