இரவு 9 மணிக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு காத்திருக்கும் தீர்ப்பு..!
புதிய இணைப்பு
15 குற்றவாளிகளின் தண்டனையை குறைப்பது தொடர்பில் அவர்களின் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் கேட்டறிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரச தரப்பு சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிசிட்டர் ஜெனரல், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட வேண்டிய தண்டனை தொடர்பான தமது வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று(22) இரவு 9 மணிக்கு அறிவிக்கப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில், 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், மொத்தம் 24 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேர்
முகம்மது இப்ராஹிம் முகம்மது நெளபர் (நௌஃபர் மௌலவி), முகம்மது சரிபு ஆதம் லெப்பை (அபு ஹாத்விக்) ,ஹயாத்து முகம்மது அஹமட் மில்ஹான் (அபு சில்லா) ,முகம்மது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்) ,முகம்மது இப்ராஹிம் அப்துல் ஹக் (அபு பலா) முகம்மது அன்வர், முகம்மது ரிஸ்கான் (அபு தாரிக்), முகம்மது மன்சூர் ,முகம்மது சனாஸ்தீன் (அபு மிசான்) அப்துல் மனாப் முகம்மது பிரிதௌஸ், முகம்மது ரமீஷ் முகம்மது சாரிக் / சாஜித் ஹுஸைனுல் ரிஸ்வி முகம்மது காஹிர் சமீர் முகம்மது ஹனீபா சைனுல் ஆப்தீன் (அபு ஹினா) ,முகம்மது முஸ்தபா முகம்மது ஹாரிஸ் (அபு நன்ஜியார்) ராசிக் ராஸா ஹுஸைன் கச்சி, முகம்மது ஜஸ்மின் அப்துல் லதீப் முகம்மது சாப்பி (சாப்பி மௌலவி / அபு புர்கான்)

மேற்கண்ட 15 பேரில், அப்துல் லதீப் முகம்மது சாப்பி ஒரு குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மற்ற 14 பேரும் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 9 பேர்
முகம்மது சஹீர் முகம்மது ஹசன் (அபு தாவூத்) ,முகம்மது இப்திகார் முகம்மது இன்சாப் (அபு முகம்மது), ரஷீத் முகம்மது இப்ராஹிம் சைனுல் ஆப்தீன், முகம்மது ஜசீம் ,முகம்மது முஸ்தபா, முகம்மது ரிஸ்வான் மீரா சாஹிப், முகம்மது நப்கி (அபு சனா) முகம்மது அமீர் முகம்மது அயாத்துல்லா, முகம்மது அன்சார்தீன் ,முகம்மது இல்மி, முகம்மது அக்ரம் அஹக்கம்

இதேவேளை, வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் யாசின் பாவா அப்துல் ரவூப் என்பவர் சிறைக்காவலில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்குமான தண்டனை விபரங்கள் நீதிமன்றத்தால் பின்னர் அறிவிக்கப்படவுள்ளன.


