அல்ஹைதா ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் இலங்கையருக்கு உயிர்த்தஞாயிறுதாக்குதலில் தொடர்பா! விசாரணைகள் தீவிரம்
அல்ஹைதாவுடன் தொடர்புகளை பேணியவர் என சமீபத்தில் அமெரிக்க அதிகாரிகளால் தடை பட்டியலில் சேர்க்கப்பட்ட இலங்கை வர்த்தகர் முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசாருக்கு உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ளதா என பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பாரிய வலையமைப்புடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என விசாரணையை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த தகவல்களில் இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் பேருவளையை சேர்ந்த நிசார் அல்ஹைதாவை சேர்ந்த அஹமட் தலிப்புடன் வர்த்தக தொடர்புகளை வைத்திருந்தார் என குற்றம்சாட்டி அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டு சொத்து பிரிவு அவருக்கு தடைவிதித்தது.
விசாரணை
இதேவேளை அல்ஹைதாவை சேர்ந்தவரான அஹமட் லுக்மான் தலிப்( இவரும் தடைப்பட்டியலில் உள்ளவர்) முகமட் இர்சாத் முகமட் ஹரீஸ் நிசாரின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் போது அல்ஹைதாவை சேர்ந்த நபர் நிட்டம்புவை சேர்ந்த கலேலிய பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
அவர் தனது பிள்ளைகளுடன் பல வருடங்களிற்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்று அவுஸ்திரேலிய பிரஜையானார் என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தாலிப்பின் மூத்த மகனும், கட்டார் அரசாங்கத்தால் 2020 இல் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார். அதே ஆண்டு அவரும் அமெரிக்க திறைசேரியால் துறையால் சந்தேக நபராக அறிவிக்கப்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள லுக்மானின் இளைய மகன் - அஹ்மத், இரத்தின வியாபாரத்தில் இருக்கிறார், இப்போது அவர் அவுஸ்திரேலிய அரசாங்க காவலில் உள்ளார்.
பேருவளையை சேர்ந்த நிசார், அகமதுவின் மாமியாரது உறவினராவார், அவர்
ரத்தினக்கல் வியாபாரமும் செய்து வருகிறார் என்பது விசாரணையில்
தெரியவந்துள்ளது. இந்தநிலையில் பேருவளையில் உள்ள அவரது பொலிஸார் சீல்
வைத்துள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

பிரம்மபுத்திரா நதி இந்தியாவிற்குள் பாய்வதை சீனா நிறுத்த வேண்டும்! பாகிஸ்தான் விடுத்த கோரிக்கை News Lankasri
