ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி உதவி வழங்கிய பாப்பாண்டவர்
பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சுமார் 400 லட்சம் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார்.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் இந்த பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயார் இல்ல தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அருட்தந்தை ஜுட் பெர்னாண்டோ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

கடந்த பெப்ரவரி மாதம் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கான் விஜயம் செய்திருந்த போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக தாம் ஒரு லட்சம் யூரோ வழங்குவதாக பாப்பாண்டவர் கூறியதாகவும் அதன் அடிப்படையில் அந்த தொகையை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பகிரப்படும் நிதியுதவி

இந்த நிதி நாளைய தினம் முதல் கட்டம் கட்டமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதலுக்கு இலக்கானோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட உள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், காயங்கள் ஏற்பட்டவர்கள், தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவோர் ஆகியோருக்கு இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
| இலங்கையில் சுப்பர் மார்க்கெட்களில் நடக்கும் மோசடி - கடும் கோபத்தில் மக்கள் |
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த திவ்யாவுக்கு ரூ.50 லட்சம் மட்டுமின்றி மேலும் ஒரு பெரிய பரிசு! என்ன பாருங்க Cineulagam
டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்? News Lankasri