ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முன்னாள் ஜனாதிபதியின் மனுமீதான விசாரணைக்கு திகதி அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மனுவை விசாரிக்க திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவை விசாரணைக்குட்படுத்தி தண்டனை வழங்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி, மற்றும் தாக்குதலில் காயமடைந்த ஜேசுதாசன் நடேசன் ஆகியோர் தனிப்பட்ட மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு
இந்நிலையில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடுகளை வலுவிழக்கச் செய்ய உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, ஜூலை 31 மற்றும் ஓகஸ்ட் 9ஆம் திகதிகளில் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று நீதியரசர் குழாம் உத்தரவிட்டுள்ளது..

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

காதலனுடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படதை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன். எல்லை மீறியதால் ரசிகர்கள் ஷாக் Cineulagam

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri
