சஹ்ரான் குழு குறித்து சிக்கிய ஆதாரங்கள்: விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பிய புலனாய்வு பிரிவு: அம்பலமான தகவல்

2019 Sri Lanka Easter bombings Kabir Hashim Mahinda Rajapaksa Easter Attack Sri Lanka Channel 4 Easter Attack
By Benat Sep 22, 2023 12:18 PM GMT
Report

2018 நவம்பர் மாதம் வவுனதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை சஹ்ரான் குழுவே கொலை செய்தது என்பதற்கான ஆதாரம் இருந்த போதிலும், புலனாய்வு குழுவில்  ராஜபக்‌சக்களுக்கு ஆதரவாக  செயற்பட்ட தரப்பினர் அந்த கொலை தொடர்பான குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் அமைப்பினர் மீது திசை திருப்பினர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.

இலங்கையில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குற்றவாளிகள் யார் என்பதனை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுடன் அதற்கான சுயாதீன சர்வதேச விசாரணை அவசியமாகும் என்பதனையே நாங்கள் கோருகின்றோம். தேசப்பற்று, மதம், இனம் தொடர்பில் தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள் தொடர்பிலேயே சந்தேகங்கள் உள்ளன.

இந்நிலையில் சனல் 4 விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சந்தேகங்கள் ஏற்படுகின்றன. சனல் 4 விவகாரத்தில் அசாத் மௌலானா என்பவர் டி.எம்.வி.பி கட்சியின் உறுப்பினர்.

ஏற்பட்ட சந்தேகங்கள்

இது ஸ்ரீ பொதுஜன முன்னணியின் கூட்டு கட்சியாகும். பிள்ளையான் அதில் இருக்கின்றார். அந்தக் கட்சியின் மாகாண சபை வேட்பாளராகவும் இருந்துள்ளார். அத்துடன் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது அவரது செயலாளராகவும் இருந்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மீது சந்தேகங்கள் ஏற்பட இன்னும் காரணங்கள் உள்ளன. அதன்படி தான் பதவிக்கு வந்ததும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறினாலும் 3வருடங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை.

சஹ்ரான் குழு குறித்து சிக்கிய ஆதாரங்கள்: விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பிய புலனாய்வு பிரிவு: அம்பலமான தகவல் | Easter Attack Sri Lanka 2019 Ltte War

மாறாக சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார்கள். குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் சஹ்ரான் குழுவுக்கும் ராஜபக்சக்களுக்கும் இடையிலான தொடர்பு இவர்களுக்கு இடை தரகர்களாக செயற்பட்டவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தினர். இதனால்தான் அவர்களுக்கு இடமாற்றம் செய்தனர். இதில் சந்தேகங்கள் ஏற்படாதா?

2018 நவம்பர் மாதத்தில் வவுனதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டனர். சஹரான் குழுவே கொன்றது என்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதும் புலனாய்வு குழுவின் ராஜபக்‌சக்களுக்காக செயற்பட்டவர்கள் அதனை விடுதலைப் புலிகள் மேல் சுமத்தினர்.

அன்று பொலிஸாருக்கு தாக்குதல் நடத்தப்பட்ட ஆயுதத்திலேயே அன்று மாவனெல்லையில் எனது செயலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சந்தேகங்கள் ஏற்படாதா? அன்று வனாத்தமுல்லையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பிலும் சி.ஐ.டி விசாரணைகள் திசை திருப்பப்பட்டன. இதனால் எங்களின் சந்தேகங்கள் சரியானதே.

இதேவேளை 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி மகிந்தவை பிரதமராக திருட்டுத் தனமாக மைத்திரிபால சிறிசேன நியமித்தார். அதுவே அவர்களின் 'பிளேன் ஏ' அது தோல்வியடைந்தது. அதன்பின்னர் மாவனெல்லையில் புத்தர் சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்பின்னர் இது தொடர்பில் பாதுகாப்பு சபையை கூட்டுமாறு கூறியும் அதனை செய்யவில்லை. இதனால் விசாரணைகளை மூடி மறைக்க திட்டமிட்டு முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகங்களுக்கு காரணங்கள் இருக்கின்றன என குறிப்பிட்டார். 

கொலையாளி என்று கூறியதால் சபையில் அமைதியான பிள்ளையான்(Video)

கொலையாளி என்று கூறியதால் சபையில் அமைதியான பிள்ளையான்(Video)

குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் அனுப்பப்பட்ட குரல் பதிவுகள்: எதிர்கால தாக்குதல் தொடர்பில் சபையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் அனுப்பப்பட்ட குரல் பதிவுகள்: எதிர்கால தாக்குதல் தொடர்பில் சபையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மக்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்: மகிந்த அமரவீர தகவல்

மக்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ள பணம்: மகிந்த அமரவீர தகவல்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US