சஹ்ரானுக்கு மேல் ஒரு தலைவர்! பிரதான சூத்திரதாரி பெயரை துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்த முக்கிய அதிகாரி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் வழங்கச் செனய அதிகாரி ஒருவர், சாட்சி தெரிவிப்பதற்கு பதிலாக பிரதான சூத்திரதாரி யார் என்பதை துண்டுச் சீட்டு ஒன்றில் எழுதிக் கொடுத்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதான சூத்திரதாரி யார்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்காெடுப்பதாகவும் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் கொண்டுவருவதாகவும் தெரிவித்து ஆட்சிக்கு வந்த, இந்த அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறைந்தபட்சம் இந்திய வெளிவிவாக அமைச்சர் நாட்டுக்கு வந்தபோது, இந்தியாவுக்கு தப்பிச்சென்ற சாரா ஜெஸ்மின் தொடர்பில் கேட்டார்களா? ஆனால் அரசாங்கம் இது தொடர்பில் மிகவும் மெத்தன போக்கையே கடைப்பிடித்து வருகிறது. அதனால் அரசாங்கம் இந்த விடயத்தை விரைவுபடுத்துமாறு தெரிவிக்கிறோம்.
மேலும் சஹ்ரானுக்கு மேல் ஒரு தலைவர் இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். அப்படியானால் அவர் யார் என்பதை வெளிப்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.
அநுர என்ன செய்யப் போகிறார்...
அதேபோன்று இந்த சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவுக்கு சாட்சி வழங்க சென்ற அதிகாரி, சாட்சி தெரிவிப்பதற்கு பதிலாக, பிரதான சூத்திரதாரி யார் என்பதை துண்டு ஒன்றில் எழுதி கொடுத்தார். அது யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
தற்போது பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும் அனைத்து விடயங்களும் எமது அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த விடயங்களாகும்.
பொடி சஹ்ரானின் ஆலாேசகரை கண்டுபிடித்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் உண்மை நிலையை தெரிந்துகொள்ளலாம் என அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும்போது தெரிவித்தார். ஆனால் தற்போது அவர் ஜனாதிபதி.
பொடி சஹ்ரான் யார் என்பது தொடர்பில் எப்.பி.ஐ. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசாங்கம் இந்த விடயங்களை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
