ஈஸ்டர் குண்டுத்தாக்குல்: நிரபராதி என விடுதலையானவரின் இன்றைய நிலை (Video)
நிரபராதியாகிய தன்னை குற்றவாளிகள் போன்று நடத்தியதாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஆமி முகம்மது எனப்படும் முகம்மது இப்றாகிம் முகம்மது முகைதீன் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் குண்டுத் தாக்குதல் நடத்தியதற்குக் குண்டை வெடிக்கவைக்க உதவியதாகக் கைது செய்யப்பட்ட தன்னை, மாவனல்லை சிலை உடைப்பு விவகாரத்தினை காட்டியே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தான் கைது செய்யப்பட்டு நிரபராதியென விடுதலையான பின்னர் தன்னுடன் கதைப்பதற்கு ஏனையவர்கள் அஞ்சும் நிலை காணப்படுவதுடன் தனக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ஆமி முகம்மது எனப்படும் முகம்மது இப்றாகிம் முகம்மது முகைதீன் அவர்களின் ஊடக சந்திப்பு இன்றைய தினம் (24.05.2023) காலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
90ஆம் ஆண்டு இராணுவத்தில் நான் இணைந்து 14 ஆறுகளாக பணிபுரிந்து சொந்த காரணங்களினால் அதை விட்டு விடுபட்டு மேலும் 16 வருடங்களைப் பின்னர் கைது செய்து ஆர்மியிலிருந்து தப்பிச் சென்றவர்களாகக் கருதப்பட்டு இரண்டு வருடங்களாகச் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டேன்.
எனது தகப்பனார் ரேடியோ ரிப்பேரிங் செய்பவர் அதனையே நானும் செய்து வந்தேன் இவ்வாறு இருந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இராணுவத்தில் இருந்து விலகிய அனைவரையும் சேர்த்துக் கொண்டு மக்கள் மேம்பாட்டு அமைப்பு என்கின்ற சங்கத்தினை ஆரம்பித்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
