ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அரசின் அடிப்படைப் பொறுப்பு: சஜித் பிரேமதாச
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது அரசின் அடிப்படைப் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், கடந்த கால மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தத் தவறிவிட்டன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்
இன்று (ஏப்ரல் 5) விடுத்துள்ள ஈஸ்டர் செய்தியில், வலியை மறக்காத நினைவுகள்: ஈஸ்டர் பண்டிகை என்பது நம்பிக்கை, புதுப்பித்தல் மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது.
இருப்பினும், இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மற்றும் விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அந்தத் தற்கொலைத் தாக்குதல்களின் வலிமிகுந்த நினைவுகள் இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையவில்லை. இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இன்னும் நீதி வழங்கப்படாமல் இருப்பது ஒரு தேசமாக நாம் அடைந்த பெரும் தோல்வியாகும்.

உண்மையை வெளிப்படுத்துவதும் நீதியை உறுதிப்படுத்துவதும் தவிர்க்க முடியாதவை. சட்டத்தின் ஆட்சி, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பேணுவது இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவசியமாகும்.
இவ்வாறான சோகங்கள் இனி ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய, அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் சமூகங்களை ஒன்றிணைத்து, நம்பிக்கை மற்றும் அமைதியின் அடிப்படையில் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவது மிக முக்கியமானது.
பாதிக்கப்பட்டவர்களை கௌரவிப்பதற்கும், உண்மை, நீதி, அமைதி மற்றும் ஒற்றுமைக்கான கூட்டு அர்ப்பணிப்பை புதுப்பிப்பதற்கும் இந்த ஈஸ்டர் காலத்தைப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam