உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விவகாரம்: தீவிரமடையும் விசாரணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலம் பற்றிய விசாரணைகளை துரிதப்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு மாளிகாகந்த நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட வாக்குமூலம் தொடர்பான வழக்கு இன்று (10.05.2024) மீண்டும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை முன்னேற்றம் தொடர்பான மேலதிக அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையே விசேட சந்திப்பு - செய்திகளின் தொகுப்பு
வழக்கு விசாரணை
இதனை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரஜைகள் தாக்கல் செய்த முறைப்பாடுகளை ஒரே நேரத்தில் விசாரணை செய்து வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் முடிவில் மைத்திரிபால சிறிசேன குற்றவாளியாக காணப்பட்டதாகவும், அவர் இன்னும் அந்த மனுதாரர்களுக்கு நட்டஈடு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அது மாத்திரமன்றி, மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்துமாறும் சட்டத்தரணி கோரியுள்ளார்.
அதேவேளை, குறித்த வழக்கு எதிர்வரும் ஜூன் 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
