பாதுகாப்புத் தரப்பினர் மீது மைத்திரி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் போராட்டத்தின் போது பாதுகாப்புத் தரப்பினர் தனக்கும், கோட்டாபய ராஜபக்சவுக்கும் உரிய தகவல்களை வழங்கவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (24.11.2022) உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது,அந்த இரண்டு சம்பவங்களிலும்தனக்கும் கோட்டாபய ராஜபக்சவிற்கும் இதே நிலைதான் ஏற்பட்டது.
ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் கடிதங்களை பரிமாறிக் கொண்டார்களே தவிர, அது தொடர்பில் தமக்கு ஒரு தொலைபேசி அழைப்பையும் வழங்கவில்லை.
ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பு
இதன்மூலம் ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டது.
ஜூலை 9ஆம் திகதி சுமார் 25,000 பிரஜைகள் போராட்டத்திற்காக கொழும்புக்கு வரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதிக்கு புலனாய்வுப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது போன்றதொரு ஒழுங்கற்ற நிலையே காணப்படுகின்றது. ஆனால் 400,000 பிரஜைகள் எதிர்பாராதவிதமாக கொழும்புக்கு வந்ததாகவும், அவர்களால் தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளால் உயிர்வாழ முடியவில்லை.”என கூறியுள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
