ஈஸ்டர் தாக்குதல்கள் மீதான விசாரணைகள்.. ஜனாதிபதி வெளியிட்டுள்ள சூசகமான தகவல்
2019 - ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய முக்கிய விசாரணையில் வெளியாகும் புதிய தகவல்களை உடன் வெளியிட முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், "மௌனமாக இருந்தவர்கள் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர். தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியவர்கள் கூட இப்போது தகவல்களை அம்பலப்படுத்தப்படுகிறார்கள்.
எனவே, எதிர்வரும் சில விசாரணைகள் புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அவை உடனடியாக வெளியிடப்படாமல் போகலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடவடிக்கைகள்
ஜனாதிபதி தேர்தலில் மூன்றில் ஒரு பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்போம் என தெரிவித்திருந்தது.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட நாட்டில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களின் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டது.
அந்தவகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அண்மையில், கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மூலமாகவும் பல தகவல்கள் தெரிய வந்துள்ளதாக குற்றபுலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
