ஈஸ்டர் தாக்குதல் விசாரணை அறிக்கை மீது நாடாளுமன்றில் 3 நாள் விவாதம்! - சஜித் அணி வலியுறுத்து
உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் மூன்று நாட்கள் விவாதம் அவசியம் எனப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. மேற்படி அறிக்கை நேற்று வியாழக்கிழமை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே எதிரணி பிரதம கொடறாவான லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தாக்குதலை தடுக்காமல் இழைக்கப்பட்ட தவறுகள் தொடர்பில் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும் தாக்குதலின் பின்புலம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
விவாதம் தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்கலாம் எனச் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார். அதேவேளை, விவாதத்துக்கு வாய்ப்பு வழங்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனை ஆளுந்தரப்பு நிச்சயம் வழங்கும் என்று சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் நுழைந்த ட்ரக்: சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
