சர்வதேச விசாரணை பொறியில் கோட்டாபய - கருணா - பிள்ளையான்: தப்புவதற்கு புதிய வியூகம்(Video)
சனல் 4 ஆவணப்படத்தினுடைய பின்னணியில் கோட்டாபய உள்ளிட்ட தரப்பினர் சர்வதேச விசாரணைக்கு உள்ளாகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக புலனாய்வு செய்தியாளர் எம். எம். நிலாம்டீன் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படமானது இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தும்? என லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், சனல் 4 ஆவணப்பட சர்ச்சையில் இருந்து தப்பிக்கும் நோக்குடன் கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு கேடயமாக நாடாளுமன்றத்தை பயன்படுத்த நினைப்பதாகவும், தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு உள்நுழைய திட்டமிடுகிறார் எனவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு சனல் 4 ஆவணப்பட சர்ச்சையில் சிக்கியுள்ள ராஜபக்ச தரப்புக்கும், அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
