உயிர்த்த ஞாயிறு தாக்குதல் திட்டத்தின் பின்னணியில் செயற்பட்ட சிங்கள அரசியல்வாதிகள்! அம்பலப்படுத்தும் சந்திரிகா
பலம்பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை திட்டமிட்டுள்ளனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
அல்சுஹிரியா அரபுக்கல்லூரியில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா வழக்கில் சாட்சிகள் என கருதப்படக்கூடியவர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்த டுவிட்டர் பதிவிற்கு அளித்துள்ள பதிலில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் பதிவு
This pogrom against the Muslim
— Chandrika Bandaranaike Kumaratunga (@CBKsrilanka) May 23, 2023
people is a repitition of attacks against them in 2013/ the Easter bombings clearly organised by a few powerful Sinhala politicians /
the Hejaaz Hisblluh case / the Dr.Shafi hoo-hah and many other events to demonise the Muslim people .
அந்த பதிவில்,இது முஸ்லீம்களிற்கு எதிரான நடவடிக்கை 2013 இல் அவர்களிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை போன்றது. அது மீண்டும் நிகழ்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், வைத்தியர் ஷாபி விவகாரம் போன்ற பல விடயங்கள் முஸ்லீம்களை ஆபத்தானவர்களாக சித்தரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
