கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணங்கள்! மைத்திரி பரபரப்பு தகவல்

Gotabaya Rajapaksa Maithripala Sirisena Sri Lanka Politician Easter Attack Sri Lanka Sri Lankan political crisis
By Chandramathi Oct 18, 2023 01:39 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவிடமும் இரகசிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இரகசிய ஆவணங்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,'' நான் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அறிக்கையை கையளிக்கும்போது, தனியான ஒரு கோப்பாக கையளித்தனர்.

கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணங்கள்! மைத்திரி பரபரப்பு தகவல் | Easter Attack Documents Release Gotabaya Rajapaksa

இந்த கோப்பு சட்டமா அதிபருக்கோ, புலனாய்வு பிரிவினருக்கோ, சி.ஐ.டியினருக்கோ, பொலிஸாருக்கோ வழங்காமல், தனிப்பட்ட ரீதியாக வைத்துக் கொள்ளுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இரண்டு நாட்களுக்கு முன்னர், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஆலோசகர் பேராசிரியர் ரோஹான் குணரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் விசாரணைக் குழுக்களுக்கு வெளிப்படுத்த முடியாத, மிகவும் இரகசியமான அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிக்கைகளை எந்த காரணம் கொண்டும் வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரோஹான் குணரத்ன இரகசியமான அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், கோட்டாபய ராஜபக்சவிடமும் இரகசியமான கோப்பு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விசாரணைகளும் தவறானவை

எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளும் தவறானவை என்பதோடு, அநீதியானவை என்பதை இங்கே நான் கூறிக்கொள்கிறேன்.

கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்ட இரகசிய ஆவணங்கள்! மைத்திரி பரபரப்பு தகவல் | Easter Attack Documents Release Gotabaya Rajapaksa

இந்த நாடாளுமன்றில் இதற்கு முன்னரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இதில், எனக்கு எதிரானவர்கள் மட்டும்தான் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். வன்மத்துடன், பழி வாங்கும் நோக்கத்துடன் தான் இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

இதற்கமைய சனல் 4 வெளியிட்டுள்ள காணொளி தொடர்பாக, நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரின் நிலைப்பாட்டில்தான் நானும் உள்ளேன்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ள அமெரிக்கா

சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்துள்ள அமெரிக்கா

கைமாறுகிறதா சீனாவின் கொழும்பு துறைமுக நகரம்...! பிரித்தானிய முன்னாள் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

கைமாறுகிறதா சீனாவின் கொழும்பு துறைமுக நகரம்...! பிரித்தானிய முன்னாள் பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்




மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US