உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை! சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்த மைத்திரி
மருந்துகள் கட்டளைச் சட்டம்
அதன்படி, ஏப்ரல் 24 புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை குற்றவியல் நடைமுறை (திருத்தம்) சட்டமூலம் (இரண்டாம் வாசிப்பு) மற்றும் விஷ பொருட்கள், ஒளடதம் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள கட்டளைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்த பிரேரணையின் படி முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பதில் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மையான பிரச்சினையைத் திசை திருப்ப முயலும் இந்திய அரசியல் : கச்சதீவு தொடர்பில் பழ.நெடுமாறன் காட்டம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |