ஈஸ்டர் தாக்குதல்! மைத்திரி உள்ளிட்டோருக்கு எதிராக 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களைத் தடுக்க தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
இதன்படி மார்ச் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை மூன்று நாட்களுக்கு இந்த மனுக்களை விசாரணை செய்ய நேற்று கூடிய 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முடிவு செய்துள்ளது.
தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பால் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் குறித்து முன்கூட்டிய போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தாக்குதல்களை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமையால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன என தெரிவித்து இந்த மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இந்த மனுக்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
விஜய் ஒரு வழிமறிப்பாளர் மட்டுமே! கூட்டம் வாக்குகளாக மாறுமா - சர்வதேச ஊடகங்களில் முக்கியச் செய்தியாக தமிழக தேர்தல்
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri