கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்த நாட்டிற்கும் விற்பனை செய்வதற்கு கையெழுத்திடவில்லை!ஐக்கிய தேசியக்கட்சி
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தையோ அல்லது கொழும்பு துறைமுகத்தின் எந்தப் பகுதியையும் இந்தியா, ஜப்பான் அல்லது வேறு எந்த நாட்டிற்கும் விற்பனை செய்வதற்கு 2019 இல் தமது அரசாங்கம் எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
எனினும் முனையத்தை ஒரு நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட இலங்கை, இந்திய மற்றும் ஜப்பானிய அரசாங்கங்களுக்கு இடையே உடன்படிக்கை கையெழுத்தானது.
அதன்படி, இலங்கை 51 வீதப் பங்குகளைத் தக்க வைத்துக்கொள்ளும் என்ற உடன்பாடு எட்டப்பட்டது.
மீதமுள்ள 49 வீதப் பங்குகளை இந்தியாவின் பரிந்துரைக்கபபட்ட நிறுவனத்துக்கும் ஜப்பானின் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனத்துக்கும் விநியோகிக்க இணங்கிக்கொள்ளப்பட்டதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.